என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » ராஜஸ்தான் சட்டசபை
நீங்கள் தேடியது "ராஜஸ்தான் சட்டசபை"
ராஜஸ்தான் மாநிலத்தில் குஜ்ஜார் இனத்தவர்கள் மற்றும் 4 இதர சாதியினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 5 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மசோதா சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. #Rajasthangovt #5pcquota #Gujjarsquotabill
ஜெய்பூர்:
ராஜஸ்தானில் குஜ்ஜார் சமூகத்தினர், தங்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி 2007ம் ஆண்டில் இருந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். சாலை மறியல் மற்றும் ரெயில் மறியல் போராட்டங்கள் தீவிரமாக நடத்தினர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதையடுத்து குஜ்ஜார் சமூகத்தினருக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என கடந்த 2017-ம் ஆண்டில் அம்மாநில அரசு வாக்குறுதி அளித்தது. இதற்காக சட்டசபையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த ஐகோர்ட், மசோதாவை நிறுத்திவைத்தது. இதனால் இடஒதுக்கீடு விவகாரம் தொடர்ந்து இழுபறியாகவே உள்ளது.
இந்நிலையில், குஜ்ஜார் சமூகத்தினர் கடந்த 8-ம் தேதியில் இருந்து மீண்டும் ரெயில் மறியல் உள்ளிட்ட போராட்டத்தை தொடங்கி உள்ளனர். ரெயில்கள் செல்லும் தண்டவாளங்களின்மீது தற்காலிக கூடாரங்களை அமைத்து அவர்கள் கடந்த 6 நாட்களாக இரவு, பகலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பல பகுதிகளில் நெடுஞ்சாலைகளில் மறியல் செய்தும், வாகனங்களை தீயிட்டு கொளுத்தியும் உள்ளனர். சில இடங்களில் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையில் மோதல் வெடித்தது. இந்த போராட்டம் மாநிலம் தழுவிய வன்முறையாக மாறும் அபாயக்கட்டத்தை எட்டியுள்ளது.
இதற்கிடையில், ராஜஸ்தான் மாநில அரசின் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான சட்டத்தில் திருத்தம் செய்து மற்றும் 4 இதர சாதியினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 5 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மசோதா சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
தற்போது அம்மாநிலத்தில் 21 சதவீதமாக இருக்கும் இட ஒதுக்கீட்டு அளவை 26 சதவீதமாக உயர்த்தும் இந்த சட்டத்திருத்த மசோதாவை ராஜஸ்தான் எரிசக்தித்துறை மந்திரி பி.டி.கல்லா தாக்கல் செய்தார். #Rajasthangovt #5pcquota #Gujjarsquotabill
ராஜஸ்தானில் குஜ்ஜார் சமூகத்தினர், தங்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி 2007ம் ஆண்டில் இருந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். சாலை மறியல் மற்றும் ரெயில் மறியல் போராட்டங்கள் தீவிரமாக நடத்தினர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதையடுத்து குஜ்ஜார் சமூகத்தினருக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என கடந்த 2017-ம் ஆண்டில் அம்மாநில அரசு வாக்குறுதி அளித்தது. இதற்காக சட்டசபையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த ஐகோர்ட், மசோதாவை நிறுத்திவைத்தது. இதனால் இடஒதுக்கீடு விவகாரம் தொடர்ந்து இழுபறியாகவே உள்ளது.
இந்நிலையில், குஜ்ஜார் சமூகத்தினர் கடந்த 8-ம் தேதியில் இருந்து மீண்டும் ரெயில் மறியல் உள்ளிட்ட போராட்டத்தை தொடங்கி உள்ளனர். ரெயில்கள் செல்லும் தண்டவாளங்களின்மீது தற்காலிக கூடாரங்களை அமைத்து அவர்கள் கடந்த 6 நாட்களாக இரவு, பகலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வருமானத்தில் பின்தங்கிய உயர்சாதியினருக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கும்போது எங்களுக்கு ஏன் 5 சதவீதம் வழங்க கூடாது என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
இதற்கிடையில், ராஜஸ்தான் மாநில அரசின் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான சட்டத்தில் திருத்தம் செய்து மற்றும் 4 இதர சாதியினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 5 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மசோதா சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
தற்போது அம்மாநிலத்தில் 21 சதவீதமாக இருக்கும் இட ஒதுக்கீட்டு அளவை 26 சதவீதமாக உயர்த்தும் இந்த சட்டத்திருத்த மசோதாவை ராஜஸ்தான் எரிசக்தித்துறை மந்திரி பி.டி.கல்லா தாக்கல் செய்தார். #Rajasthangovt #5pcquota #Gujjarsquotabill
×

X